நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளதுவெள்ளாங்குழி கிராமம். இங்குள்ளவர் சுடலை முத்துமணி இவரது மகன் இசக்கி சங்கர்(32). இவர் அருகே உள்ள களக்காடு மத்திய கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக வேலைபார்த்து வந்தார்.வழக்கம் போல் இசக்கி சங்கர் இன்று காலையில் தனது கிராமத்தின்அருகே உள்ள ஆற்றில் குளிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது ஒரு மர்ம கும்பல் ஒன்று அவரை விரட்டியது. அவர் அந்த கும்பலிடம்சிக்கிக்கொண்டார் தப்பமுடியவில்லை. ஒருசிலநொடிக்குள் அந்தகும்பல் படுபயங்கரமாக அவரதுகழுத்திலும், தலையிலும் வெட்டியது. இதன் காரணமாக இசக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை வெட்டிய அந்த கும்பல் வந்த சுவடு தெரியாமலேயே தப்பியது. சம்பவ இடத்திற்கு வந்த அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இசக்கி சங்கர் தனது வீட்டின் அருகே உள்ள மாற்று சமுதாயத்தை சார்ந்த ஒரு பெண்ணை இரண்டு வருடமாக காதலித்து வந்திருக்கிறார். இரண்டு பேரும் மனமொத்த காதலர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே இவர்களின் ரகசிய சந்திப்பு பற்றிபெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமான பெண்ணின்குடும்பத்தினர் இசக்கி சங்கரின் குடும்பத்தாரோடு வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்ததாம். அப்போதே சிலர் தலையிட்டு இவர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த மத்தியஸ்தர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி இரண்டு குடும்பத்தாரிடமும் பேசி ஒப்புக்கொள்ள வைத்தார்களாம். இதில் பெண்ணின் தந்தைக்கு உடன்பாடு இல்லையாம்.ஆனாலும் இதற்கு அவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த முடிவை பெண்ணின் உறவினர்கள் எதிர்த்ததாக சொல்லப்படுகிறது. காரணம் இந்த பெண்ணின் உறவினர் ஒருவர் இந்த பெண்ணை திருமணம் முடிப்பதற்காக விரும்பியுள்ளாராம். இந்த நிலையில் இந்த பயங்கர கொலை இன்று காலை நடந்திருக்கிறது. விசாரணைக்காக போலீசார் அந்த பெண்ணின் தந்தையை காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இந்த படுகொலை சம்பவம் ஆணவக்கொலை காரணமா அல்லது ஒருதலை காதல் காரணமா அல்லதுவேறு பகைமை காரணமா என மூன்று கோணங்களில் விசாரணை நடப்பதாக தொடர்புடைய போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதேபோல் கடந்த 18 ஆம் தேதி அன்று மேலப்பாலாமடை கிராமத்தில் பால்துரை என்ற வாலிபர் தலை துண்டாக வெட்டி எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இன்று இன்று வாலிபர் இசக்கி சங்கர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த கொலைகளால் பீதி பற்றியிருக்கிறது.