ADVERTISEMENT

நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பிய குற்றவாளிகளின் மீது கொலைவெறி தாக்குதல்

01:00 PM Sep 13, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் ஆஜராக வந்த இளைஞர்கள். ஆஜராகி வீடு திரும்புகையில் சரமாரியாக 6 மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா வழக்கிற்காக ஆஜராக, கோவை கணபதி வஉசி நகரைச் சேர்ந்த 22 வயதான நிதீஷ் குமார் வந்திருந்தார். நிதீஷ் மேல் இரத்தினபுரி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் விற்பனை முதலான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருடன், காந்திபுரத்தைச் சேர்ந்த நண்பர் ரஞ்சித்குமாரும்(22) நேற்று நீதிமன்றம் வந்தார். ரஞ்சித் குமார் மீதும் பெண் வன்கொடுமை , கஞ்சா விற்பனை வழக்கு போன்ற வழக்குகள் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் உள்ளது. இவர்களுடன் கார்த்திக் என்பவரும் சேர்ந்து நீதிமன்றம் சென்றுள்ளார். இவர்கள், நிதீஷ்குமார் வழக்கு நடந்து வரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்திற்கு நேற்று உடன் வந்துள்ளனர்.

தொடர்ந்து, ரஞ்சித் குமாரின் வழக்கும் அங்குள்ள மகளிர் நீதிமன்றத்தில் தான் வாதிடப்பட்டு வருகிறது. எனவே, ரஞ்சித்தும், நிதீஷ் குமாரும் தங்களின் வழக்குகளுக்கு ஆஜராகி விட்டு தனது நண்பர் கார்த்தியுடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் காந்திபுரம் பயணித்தனர். மூவரும் நஞ்சப்பா சாலை அருகே சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இரண்டு வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

இதனையறிந்த மூவரும் வண்டியில் வேகமாகச் சென்ற போது நிலை தடுமாறி கீழே சரிந்தனர். அப்போது, மூவரையும் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைக்க கார்த்தி மட்டும் அங்கிருந்து தப்பியோட, ரஞ்சித்தும், நிதீஷ் ஆகிய இருவரும் சிக்கிக்கொண்டனர். பின்பு இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வரவே அந்த கும்பல் தப்பியோடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் முன் விரோதத்தின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறதா என்ற கோண்டத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் நீதிமன்றத்தில் வழக்கிற்காக ஆஜராகி விட்டு வெளியே வந்தபோது முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT