The person who published the video of tying thali to the school girl was arrested!

Advertisment

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவரிடம் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் காந்தி சிலைக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு மாணவர் ஒருவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த மாணவி அரசுப் பள்ளியில் 12- ஆம் வகுப்புப் படித்து வந்தது தெரிய வந்தது.

அதேபோல், மாணவிக்கு தாலி கட்டியவர் வடஹரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு பேரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மாணவியிடம் குழந்தைகள் நலத்துறை அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

Advertisment

இதனிடையே, இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பாலாஜி கணேசன் என்பவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனினும், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.