/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/covai_5.jpg)
கோவை கிணத்துக்கடவில் உள்ள அரசம்பாளையம் கிராமத்தில், முன்னாள் திமுக எம்.எல்.ஏ. 'நெகமம்' கே.வி.கே என்கிற கே.வி.கந்தசாமியின்பேரன் சபரிகார்த்திகேயன். இவர், கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம்அரசம்பாளையத்தில் 'அதிமுகவை புறக்கணிப்போம்' என்ற துண்டுப் பிரசுரத்தை வழங்கி, கிராமசபைக் கூட்டத்திற்குப் பொதுமக்களுக்கு அழைப்பு கொடுத்தார்
அப்போது, அங்கு வந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி பிரசாரம், இப்படிச் செய்யக் கூடாது எனத் தடுத்தார். அப்போது இன்ஸ்பெக்டரோடுபேசிக்கொண்டே சென்று,கிராமசபைக்குஅழைப்பு கொடுத்தார் சபரிகார்த்திகேயன்.அப்போது, அதிமுகவினர் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய அனுமதியா? கோவை என்ன அதிமுகவின் தனித் தீவா? வேண்டுமானால் அவர்களையும் 'கிராமசபைக் கூட்டம்' நடத்தச் சொல்லுங்கள். எதற்காக எங்களைத் தடுக்கிறீர்கள்? ஜனநாயக நாட்டில் மக்களைச் சந்திக்கக் கூடாதா?என அடுக்கடுக்கானகேள்விகளைஎழுப்பினார். ஆனால், போலீசார் தொடர்ந்து தடுத்தனர். இருப்பினும்சபரிகார்த்திகேயனும்துண்டுப் பிரசுரத்தை வழங்கி, கிராமசபைக் கூட்டத்திற்குப் பொதுமக்களுக்கு அழைப்பு கொடுத்தார்.சபரிகார்த்திகேயனுடன் இருந்தவர்கள் நோட்டீசு தானே கொடுக்குறோம், இதற்கெல்லாமாமிரட்டுவீர்கள்? எனப் போலீசாரிடம் கேட்டனர்.இதனால், அப்பகுதி சிறிதுநேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)