ADVERTISEMENT

வாராக்கடனில் (NPA) கல்விக்கடன் இணைப்பு ! பேச மறுக்கும் கட்சிகள் !

09:55 AM Apr 10, 2019 | Anonymous (not verified)

இந்தியாவில் ஏழை , எளிய மாணவர்கள் தரமான உயர்கல்வியை பெறும் வகையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் "கல்விக்கடன்" (Education Loan) கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மத்திய நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டுக்கும் பல லட்சம் மாணவர்கள் உயர்கல்வியான (பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு ,வெளிநாடுகளுக்கு சென்று படித்தல்) பயில இந்திய வங்கிகளின் மூலம் கல்வி கடனை பெற்று படித்து வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு பல்லாயிரம் கோடியை கல்விக்கடனுக்கு வழங்குகிறது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்.

பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை !

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் , பாலிடெக்னிக் மற்றும் மற்ற படிப்புகள் படித்து முடித்த மாணவர்களில் 50% மேற்பட்டோர் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் வங்கியில் கல்வி கடனை பெற்று படித்தவர்கள் ஆவர். படிப்பை முடித்த பிறகு கல்வி கடனைக்கட்ட இயலாதவர்களுக்கு சமந்தப்பட்ட வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கின்றனர்.

ADVERTISEMENT



வாராக்கடனில் (Non- Performing Asset) கல்வி கடனை இணைக்கும் வங்கிகள் !

வாராக்கடன் என்றால் என்ன ? என்பது இந்தியாவில் உள்ள பெரும்பாலானோருக்கு தெரியாது !

இந்தியாவில் வாராக்கடன் தொடர்பாக மாநில உயர்நீதிமன்றங்கள் , உச்சநீதிமன்றம் , மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து வருகின்றனர். வாராக்கடன் என்பது தொழில் தொடங்க வங்கியிடம் கடன் வாங்கி பின்பு அந்த கடன் தொகையை ஒவ்வொரு மாதமும் வட்டி மற்றும் அசலுடன் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT



ஒர் குறிப்பிட்ட மாதத்திற்கு வட்டி மற்றும் அசல் தொகையை வங்கியிடம் செலுத்தாத பட்சத்தில் தனக்கென்று ஏற்கெனவே உள்ள கணக்கை வாராக்கடனில் இணைத்து விடுவார்கள். இதை வங்கி பொது மேலாளர் மட்டுமே செய்வார். பின்னர் வாராக்கடனில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது என சமந்தப்பட்ட நபர்களுக்கு கடிதம் மூலம் வங்கி மேலாளர் தகவல் தெரிவிப்பார். சமந்தப்பட்ட நபர் வங்கி மேலாளரை சந்தித்து கட்ட வேண்டிய தொகையை உடனடியாக செலுத்தினால் அந்த வாராக்கடன் பட்டியலில் இருந்து சமந்தப்பட்ட நபரின் பெயரை நீக்குவார் . ஒரு வேளை கடன் பெற்ற நபர் வங்கி மேலாளரை சந்திக்கவில்லை எனில் இரண்டாவது முறையாக நீதிமன்ற நோட்டீஸ் அனுப்புவார்.அதில் கடன் பெற்ற நபர் கடிதத்தில் குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மேலும் மூன்று முறை நீதிமன்றத்தில் சமந்தப்பட்ட நபர் ஆஜராக தவறினால் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நீதிமன்ற நீதிபதி உத்தரவிடுவார். இதன் பின்பு நீதிமன்ற ஆணையை பயன்படுத்தி வங்கி அதிகாரிகள் சமந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வார்கள்.



இந்த முறையே வாராக்கடன் (NPA) ஆகும். இந்த வாராக்கடனில் தான் மாணவர்கள் தங்கள் பெற்ற கல்வி கடனை கட்ட இயலாத இளைஞர்களை வங்கிகள் வாராக்கடன் சட்டத்தை பயன்படுத்தி நீதிமன்றத்தில் அலைய விடுகிறது. இதனால் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோடி கோடியாய் கடன் பெற்றுக்கொண்டு வங்கிகளை ஏமாற்றி வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் தொழிலதிபர்கள் . ஆனால் லட்சக்கணக்கில் மட்டும் கல்வி கடனை பெற்று படித்த இளைஞர்கள் நீதிமன்ற வாசலில் உள்ளனர். இதனால் இளைஞர்கள் சிலர் தவறான முடிவுக்கு செல்லவும் வாய்ப்பு உண்டு என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத இந்த கல்வி கடன் வாராக்கடனில் இணைப்பு தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்து மாநில மற்றும் தேசிய கட்சிகள் பேச மறுக்கிறது மற்றும் இது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதை மறுக்கும் கட்சிகள் என்பது தற்போது தெளிவாக தெரிக்கிறது. இந்தியாவில் இயங்கும் வங்கிகளின் இந்த அடக்குமுறையை ஏன் தடுக்கவில்லை என இந்திய இளைஞர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்புகின்றனர். அதே போல் இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் என்றால் மிகையாகாது.

வழக்கு பதிவால் இளைஞர்களின் கனவுகள் சிதைக்கிறது !

படித்த இளைஞர்கள் பெரும்பாலும் அரசுத்தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் இந்திய ஆட்சிப்பணி , ரயில்வே துறை , ராணுவ துறை , பெல் மற்றும் கெயில் போன்ற பொதுத்துறை நிறுவனத்தில் பணிப்புரிய அதற்கான தேர்வுக்களுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் நீதிமன்றத்தில் தொடுக்கும் வழக்குகளால் தேர்வுகளில் வெற்றி பெற்றாலும் இளைஞர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளால் அரசு பணி அவர்களுக்கு கேள்வி குறியாக மாறுகிறது. எனவே கல்வி கடன் பெற்றவர்களை குற்றவாளியாக கருதக்கூடாது என்ற கோரிக்கையை அனைத்து கட்சிகளும் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் !

வாராக்கடனில் கல்வி கடனை இணைப்பதை உடனடியாக அரசுகள் தடுக்க வேண்டும் எனவும் , வங்கிக்கடன் பெற்று திருப்பி செலுத்தாத இளைஞர்கள் மீதான குற்ற நடவடிக்கையில் இருந்து காக்க வேண்டும் என அரசுக்கு இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக வாராக்கடன் சட்டத்தில் இருந்து கல்விக்கடனை நீக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.


பி.சந்தோஷ் , சேலம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT