விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 75-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை எளிய மாணவியர்கள் சுமார் 1500ம் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர்.

How important is education?

Advertisment

Advertisment

அதனால் ஏழை, எளிய பெண் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி மாவட்ட காவல் துறையின் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி டிஎஸ்பி பாலசந்தர் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசி தலைமையில் உளுந்தூர்பேட்டை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவியர்களுக்கு ஆலோசனையும், அறிவுரைகள் வழங்கும் போது மாணவிகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்றும், கல்வியை கற்றபின் எதிர்காலத்தில் அதன் நன்மைகளையும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு சட்டத்தை விரிவாக மாணவர்களுக்கு எலிமையாக புரியும்படி அறிவுரைகளும், ஆலோசனையும் வழங்கினார்.

அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் அவர்கள், உளுந்தூர்பேட்டை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மோகன் தனிப்பிரிவு தலைமை காவலர் கொளஞ்சி. மற்றும் அரசு பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் திறளாக கலந்து கொண்டனர்.