இந்தியா முழுவதும் மாணவர்கள் எளிதாக "கல்விக்கடன்" பெறும் வகையில் மத்திய அரசு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தொடங்கியுள்ளது. இந்த இணைய தள சேவையை "NSDL" நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கான இணையதள முகவரி :

Advertisment

https://www.vidyalakshmi.co.in ஆகும். இந்த இணைய தளத்தை பயன்படுத்தி கல்விக்கடன் பெற விரும்புவோர் தனக்கென்று நிரந்தர கணக்கை உருவாக்க வேண்டும். இதில் மொபைல் எண் , ஈமெயில் முகவரி , மாணவர் பெயர் , தந்தை பெயர் உள்ளிட்டவை குறிப்பிட்டால் "USER NAME" மற்றும் "PASSWORD" கிடைக்கும்.

Advertisment

online application

அதனை தொடர்ந்து மாணவர்கள் "Log in" செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து " SUBMIT " செய்ய வேண்டும். இதில் குறிப்பாக தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள தேசிய வங்கி பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். பின்பு எந்த துறையை சார்ந்த படிப்பு , எத்தனை வருட படிப்பு , ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் கல்விக்கட்டணம் உள்ளிட்டவை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இதன் பிறகு பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு "Application No" குறுந்தகவல் வரும். அதன் பிறகு கல்வி கடன் விண்ணப்பித்தற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். விண்ணப்பத்தின் நிலையை அறிய இதே இணையதளத்திற்கு சென்று "Login" செய்து மனுவின் நிலையை அறியலாம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதனை தொடர்ந்து விண்ணப்பம் சமந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு இணையதளம் மூலம் அனுப்படும். பிறகு வங்கி அதிகாரி கல்விக்கடனுக்கு விண்ணப்பித்த மாணவர் மற்றும் அவரின் பெற்றோரை வங்கிக்கு வருமாறு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுப்பார். பின்பு வங்கி அதிகாரியை சந்தித்த பின் கல்வி கடன் வழங்குவது தொடர்பான முடிவை "Vidyalakshmi" என்ற இணையதள அதிகாரிக்கு தகவல் வழங்குவர்.

online loan

இதற்கான முழு தகவலும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் ஈமெயிலுக்கு வங்கி அதிகாரி அவ்வப்போது தகவல் வழங்குவார். எனவே மாணவர்கள் தங்கள் தொலைபேசி எண்ணுடன் பெற்றோர் தொலைபேசி எண்ணை வழங்குவது சிறப்பு. இந்த இணையதளம் மூலம் வங்கியில் ஏறி அலைவது மற்றும் அலைச்சல் தேவையில்லை. மேலும் கல்விக்கடன் சமந்தப்பட்ட வங்கிகள் வழங்கவில்லை எனில் இந்த இணையத்திலேயே புகார் அளிக்கலாம். தேசிய மயமாக்கப்பட்ட சுமார் 36 வங்கிகள் இந்த இணையதளத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பி.சந்தோஷ் , சேலம் .

Advertisment