Skip to main content

கரோனா காலத்தில் இணையவழியில் படிக்க ஏழை மாணவர்களுக்கு 500 செல்ஃபோன்கள் வழங்கிய 'அகரம்' 

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

'Agaram' provided 500 cell phones to poor students to study online during Corona

 

கடந்த 10 வருடங்களாக, தமிழகத்தில் ஏழை மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து, ஏழைகளின் வீடுகளில் கல்வி விளக்கு ஏற்றி வைத்திருக்கிறது நடிகர் சூர்யாவின் 'அகரம்' ஃபவுண்டேஷன்.

 

கரோனா காலத்தில் கூட விண்ணப்பித்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வழக்கம் போல ஆய்வுகள் செய்து, கல்லூரிகளில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள் ஆண்ட்ராய்டு ஃபோன் இல்லாமல், இணைய வகுப்புகளில் பங்குபெற முடியாமல் தவித்துவருகின்றனர்.

 

இதனையறிந்த, 'அகரம்' அறக்கட்டளையினர், ஏழை மாணவ, மணவிகள் சுமார் 500 பேருக்கு ஆண்ட்ராய்டு ஃபோன் வழங்கத் திட்டமிட்டனர். இந்தத் திட்டம் பற்றி அறிந்த அமெரிக்க வாழ் தமிழரான கல்யாணராமன், செல்ஃபோன்கள் வழங்க முன்வந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்ஃபோன்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னார்வலர்கள் முன்னிலையில், மாணவ, மாணவிகளுக்கு செல்ஃபோன்கள் வழங்கப்பட்டது. செல் ஃபோன்களுடன் அறிவுரைகள் அடங்கிய துண்டறிக்கையும் வழங்கப்பட்டது. அதில், இந்த செல்ஃபோனை, தகவல்களை அறிந்துகொள்ளுதல், பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல் போன்ற பயனுள்ளவற்றுக்காக மட்டும் பயன்படுத்துங்கள். ஆனால் விளையாட்டு, தேவையில்லாத பொழுதுபோக்குகள், நாள்முழுவதும் செல் ஃபோன்களில் மூழ்கக் கூடாது என்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

 

செல்ஃபோன்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களும் பயனுள்ள வகையில் மட்டுமே பயன்படுத்துவோம் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா - வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
karthick subburaj directing suriyas 44th film

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் 44ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ், கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது . ஆனால் தற்போது சூர்யாவுடன் திடேரென்று கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Next Story

ரீ ரிலீஸுக்கு தயாராகும் சூர்யா படம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
anjaan re release update

வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்படுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ரீ ரிலீஸ் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் படங்கள் வரை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான பையா படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது படம் முடிந்ததும் இயக்குநர் லிங்குசாமி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

anjaan re release update

அப்போது அவர், அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்துள்ளதாகவும் அதை மீண்டும் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அஞ்சான். லிங்குசாமியே தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகரக்ள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி பின்பு கலைவையான விமர்சனத்தையே பெற்றது குறிப்பிடத்தக்கது.