Government school students who cleaned the toilet...Teacher sacked

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த நிலையில் இது தொடர்பாக பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ளது மல்லப்பாடி கிராமம். இங்கு பர்கூர் ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் படித்த மாணவர்கள் சிலர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அந்த பள்ளிக்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார். அதில் தமிழ் ஆசிரியரான அணுமுத்துராஜ் தலைமையாசிரியரை பழிவாங்கும் நோக்கில் பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யசொல்லி கட்டாயப்படுத்தியது தெரிய வந்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.