Skip to main content

மே-23ல் 45 இடங்களில் வாக்குகள் எண்ணிக்கை!

Published on 19/04/2019 | Edited on 19/04/2019


 
தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. சராசரியாக 71.87 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. தென் சென்னையில் குறைந்தபட்சமாக 56.41 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

 

v

 

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இதில் சராசரியாக 75.57 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.  அதிகபட்சமாக சோளிங்கரில் 82.26 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. பெரம்பூரில் குறைந்தபட்சமாக 64.14 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

 

v


வாக்குப்பதிவு முடிந்த பின்னர்,  மின்னணு எந்திரங்கள் அந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணிநேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் உள்ளே வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

 மே 23ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 45 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. அனைத்து மின்னணு எந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 

சார்ந்த செய்திகள்