சேலம் செவ்வாய்ப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் வேதபிறவி (40). கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் மலையப்பன்.

Advertisment

salem district shevapet women inspector husband arrested police

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு வேதபிறவி வீட்டில் இருந்தபோது, அவருக்கும் கணவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மலையப்பன், கத்தியால் வேதபிறவியை தாக்க முயன்றார். இதில், அவருடைய கையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் மலையப்பன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மலையப்பனை காவல்துறையினர் கைது செய்தனர். ஆய்வாளர் வேதபிறவிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.