ADVERTISEMENT

பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

05:48 PM Sep 15, 2021 | tarivazhagan

பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும், மனித உரிமைக்கு எதிரான கொடூர உபா (UAOA) சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவும், தேசிய புலனாய்வு முகமை (NIA)க்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தி செப்டம்பர் 15 அன்று வடசென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியத் தொழிற்சங்க மய்யம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT


மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவருமான எஸ்.கே. மகேந்திரன், வி.சி.க. பகுதி செயலாளர் கல்தூண் ரவி, கவிஞர் இரா.தெ. முத்து, புரட்சிகர இளைஞர் முன்னணி செயலாளர் மகிழ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் ஜானகிராமன் பூபாலன், ராஜ்குமார், வெங்கட்டைய்யா, செம்மல், வழக்கறிஞர் அனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT