tamilnadu six districts heavy rains possible regional meteorological centre

Advertisment

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கிருஷ்ணகிரி, நீலகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

Advertisment

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பஞ்சப்பட்டி (கரூர்)- 9 செ.மீ., திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருச்சுழி (விருதுநகர்) தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.