வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு வேளைகளில் சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தற்போது சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் வள்ளுவர் கோட்டம், மாம்பலம், கோடம்பாக்கம் தியாகராய நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதே போன்று ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம்,எழும்பூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.