Skip to main content

கடலூரில் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முதல்வர் பழனிச்சாமி நலத்திட்டங்களை வழங்கினார்

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
கடலூரில் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா 
முதல்வர் பழனிச்சாமி நலத்திட்டங்களை வழங்கினார்



கடலூரில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நலத்திட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:- 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சென்னை மாகாணத்தின் தலைநகராக கடலூர் இருந்தது. கடலூர் மாவட்டத்தில் இருந்துதான் ஜெயலலிதா அரசியல் பயணத்தை தொடங்கினார். விவசாயிகள் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. குடிமராமத்து பணிகளுக்காக மேலும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டுப்பட்டு மழை நீரை சேமிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2044 கோடி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பண்ருட்டி பெண்ணையாறு, திட்டக்குடி வெள்ளாறு, விருத்தாச்சலம் மணிமுத்தாறு, பிச்சாவரம், கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படும். தமிழகத்தில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய மாநிலம் தமிழகம். அதிமுக ஆட்சியில் 65 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரை அடிக்கடி சந்தித்ததால்தான், மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆணவம் மிக்கவர்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள். ஒற்றுமையுடன் வாழ்வதே நாட்டுக்கு நன்மை. எங்களை யாரும் அசைக்கவும் முடியாது. எந்த பிரச்சினை என்றாலும் சந்திக்க தயார். உழைப்பால் இந்த பதவியை அடைந்துள்ளேன். கொல்லைப்புறமாக வரவில்லை. கொல்லைப்புறமாக வந்து யாரும் கட்சியையோ, ஆட்சியையோ பிடிக்க முடியாது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடலூர் அருண்மொழித்தேவன், சிதம்பரம் சந்திரகாசி,  சட்டமன்ற உறுப்பினர்கள் பண்ருட்டி சத்யா, விருத்தாசலம் கலைச்செல்வன், காட்டுன்னார்குடி முருகுமாறன், சிதம்பரம் பாண்டியன் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

-சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்