Prime Minister Modi in Vivekananda Hall

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் இறுதி மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று (30.05.2024) மாலை 5 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையும் முடிந்துள்ளது. மேலும் ஜூன் நான்காம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் தமிழகத்திற்கு 3 நாள் பயணமாகப் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வருகை புரிந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டு வந்தார். கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் பிரதமர் மோடி ஓய்வெடுத்தார். அதன் பின்னர் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Advertisment

அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிறப்பு படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்றார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்றார். இதன் மூலம் அங்கேயே இன்று முதல் 3 நாட்களுக்கு தாங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார். விவேகானந்தர் மண்டபத்தில் தற்போது பிரதமர் மோடி தியானத்தை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தனது 3 நாள் தியானத்தை முடித்துகொண்டு பிரதமர் மோடி ஜூன் 1 ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்வதாகக் கூறப்பட்டது.