ADVERTISEMENT

சிதம்பரத்தில் விவசாயிகளுக்கு  குமட்டி பழ தரத்தின் விதைகள், பழங்கள் வழங்கிய பசுமை இயக்கங்களின் கூட்டமைப்பு

06:50 PM Jun 13, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பசுமை இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இயற்கையான குமட்டி பழத்தாவரத்தை மீட்டெடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

ADVERTISEMENT

பசுமை இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிதம்பரத்தில் குமட்டி பழத்தாவரத்தை மீட்டெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாரம்பரிய சித்த வைத்தியர் சங்க தலைவர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் சரவணன், இயற்கை வாழ்வியல் ஆலோசகர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிவை வகித்தனர்.

பசுமை கூட்டமைப்பின் தாவரவியல் ஆலோசகர் முனைவர் இளங்கோவன் கலந்து கொண்டு பாரம்பரிய குமட்டி பழம் மற்றும் விதை விவசாயிகளுக்கு வழங்கி பேசினார்.

ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், பசுமை ஹாஜி, மணிபாரதி அச்சக மணிவண்ணன், மழை சேமிப்பு நிபுர்ணர் பொறியாளர் ராஜா, நன்மை மர செக்கு சத்தியபாணி ஆகியோர் கலந்து கொண்டு பராம்பரிய மிக்க குமட்டி பழத் தாவரத்தை பற்றி விளக்கிப் பேசினர். நிரஞ்சன்குமார் நன்றி கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் இந்த பழத்தாவரம் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில் பசுமை இயக்கங்களின் கூட்டமைப்பினர் நாகை மாவட்டம் கோடியக்கரை, வேதாரண்யம், வேளாங்கண்ணி பகுதில் உள்ள குக்கிராம பகுதிக்கு சென்று இந்த பழத்தாவரத்தின் விதை வாங்கி வந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர், சேந்திரக்கிள்ளை ஆகிய இடங்களில் பயிரிட்டு அதன் பழம் மற்றும் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT