
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23/12/2021) தமிழ்நாடு அரசினுடைய முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த முதலமைச்சர் தகவல் பலகையை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் (மின்னாளுமையை எளிமையாக்கல்) பி.டபிள்யூ.சி. டேவிதார் இ.ஆ.ப., (ஓய்வு), தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ் இ.ஆ.ப., மின் ஆளுமை இயக்குநர் / தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அலுவலர் விஜயேந்திர பாண்டியன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எந்தக் கிராமத்தில் என்ன பணி நடைபெறுகிறது, எங்கு தொய்வு என்பதை அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.