Chief Minister M.K. inaugurated the World Investors Conference. Stalin

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் (07-01-24) மற்றும் நாளையும் (08-01-24) நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

Advertisment

இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் தொழில் கருந்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Advertisment

இந்நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்நிகழ்வில் செமி கண்டக்டர் கொள்கைகள் வெளியிடப்பட்டன.