Skip to main content

திருச்சி ஜி.கார்னரில் மார்க்கெட் சந்தை நடக்குமா? நடக்காதா?

Published on 07/06/2020 | Edited on 07/06/2020

திருச்சியில் மூடப்பட்டுள்ள காந்தி மார்க்கெட் விவகாரத்தில் வியாபாரிகளிடையே இரு வேறு கருத்துகளால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பம் நிலவிவருகிறது.


கரோனோ பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது காய்கறி மொத்த விற்பனை சந்தை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்திலும், சில்லறை விற்பனை சந்தைகள் மாநகரில் 10 இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

 

 

Is the market going to happen in Trichy G Corner? Not happening?


இதனிடையே, அண்மையில் இரு முறை மழை பெய்ததில் ஜி கார்னர் மைதானத்தில் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் வைத்திருந்த காய்கறிகள் நனைத்து சிரமப்பட்டார்கள்.


ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ள நிலையில், காந்தி மார்க்கெட்டையும் திறக்க வேண்டும். இல்லையெனில், ஜூன் 7-ம் தேதி (இன்று) இரவு முதல் காய்கறி மொத்த விற்பனையை காலவரையின்றி நிறுத்திவிடுவோம் என்றும் வியாபாரிகளில் கோவிந்தராஜீலு தரப்பு அறிவித்தது. ஆனால் அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர் மாவட்ட நிர்வாகம் காந்தி மார்க்கெட்டை திறக்கும் வரை ஜி கார்னர் மைதானத்திலேயே தொடர்ந்து விற்பனையில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால், காய்கறி மொத்த விற்பனை நடைபெறுமா, இல்லையா என்று சிறு வியாபாரிகள், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

 

Is the market going to happen in Trichy G Corner? Not happening?


இதுதொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.கோவிந்தராஜூலு பத்திரிகையாளர்களிடம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை தளர்த்தப் பட்டுள்ளதால், காந்தி மார்க் கெட்டையும் திறக்க வேண்டும். இல்லையெனில், ஜூன் 7-ம் தேதி இரவு முதல் ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற்று வரும் காய்கறி மொத்த விற்பனையை காலவரையின்றி நிறுத்திவிடுவோம். இந்தப் போராட்டத்துக்கு காந்தி மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார்.


இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டச் செயலாளர் எஸ்.பி.பாபு, “கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கில் அரசின் உத்தரவு வரும் வரை ஜி கார்னர் மைதானத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்வோம். இந்த நிலைப் பாட்டில்தான் ஏராளமான வியா பாரிகள் உள்ளனர்” என்றார்.

 

 

Is the market going to happen in Trichy G Corner? Not happening?

 

இதற்கிடையில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கு.ப. கிருஷ்ணன்  திருச்சி மாவட்ட விவசாயிகள் கள்ளிக்குடி புதிய வணிக வளாகத்தில் வியாபாரிகள் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கள்ளிக்குடி அருகே ஒரு ஏக்கர் பரப்பளவில் தற்காலிக சந்தை நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இனி மேல் காந்திமார்கெட் திறந்தால் அது சட்ட விரோத மார்கெட் என்கிறார். மேலும் கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

 

Is the market going to happen in Trichy G Corner? Not happening?

 

தற்போது உள்ள சூழ்நிலையில் காந்தி மார்கெட் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை, காரணம் காந்தி சந்தையில் ஒர்ஜினல் கடை வைத்திருக்கும் வியாபாரிகளில் பலபேர் தற்போது வியாபாரம் செய்வதில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் தங்கள் கடைகளை வாடகைக்கு விட்டு இருப்பதால் தற்போது இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி கிடைக்காமல் இருக்கிறது.  

ஆனால் ஜி.கார்னரில் இன்றைக்கு சந்தை நடக்குமா ? என்பதே தற்போது மக்களின் கேள்வியாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
students and public are suffering due to impact of traffic due to weekly market

ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தை மைதானத்தில் கடந்த ஓராண்டு காலமாக புணரமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் சந்தையின் உள் புறத்திலும் வெளிப்புறத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. நாள் முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் இந்தச் சாலையில் ஒவ்வொரு வாரமும் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு வாரமும் நெரிசல் இருந்தாலும் மக்கள் சகித்துக்கொண்டனர். இந்த வாரம் மக்களிடம் இது கோபத்தை உருவாக்கியுள்ளது. காரணம், இந்த வாரம் திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுவிட்டது. மாணவ - மாணவிகள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் நேரத்தோடு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பால் மாணவ - மாணவிகள் அதில் சிக்கிக்கொண்டனர்.

இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் எனப் பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடுமையாக அவதி அடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வாரச்சந்தை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கட்டுமானம் முடியும் வரை காவல்துறை போக்குவரத்து பிரச்சனையைச் சரிசெய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

வாரச்சந்தையில் மூன்று மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! 

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
More than 5 crore goats sold in the weekly market in three hours

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும் புதன்கிழமை வாரச் சந்தை நடப்பது வழக்கம். அதன்படி இன்று (12-06-24) நடைபெற்ற இந்த சந்தைக்கு தியாகதுருவம்,  திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

பக்ரீத் பண்டிகை வருகின்ற 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகளின் விற்பனை கலை கட்டியது. காலை ஐந்து மணிக்கு தொடங்கி இந்த சந்தையில் மதுரை, ராமநாதபுரம்,  தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம்,  ஈரோடு, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள்  ஆடுகளை வாங்கி குவித்தனர்.

வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 8000 முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த வாரம் இந்த சந்தையில் ரூபாய் 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடந்த நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி இன்று நடைபெற்ற இதே சந்தையில், வியாபாரம் தொடங்கி 3 மணி நேரத்திலேயே ரூ.5 கோடிக்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.