Skip to main content

திருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி!!

அழகிரி தனது அடுத்தஅரசியல்நிகழ்வாக இடைத்தேர்தல் நடக்க இருக்கும் திருவாரூருக்கு நாளை 23ம் தேதி வருகிறார்.  அதற்கான ஏற்பாடுகளை தனது ஆதரவாளர்கள் சிலர் கவனித்துவருகின்றனர். அழகிரியின் வருகை பலரையும் ஆச்சர்யத்துடன் கூடிய எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

 

alagiri

 

நாளை திருவாரூர் வரவிருக்கும் அழகிரி காட்டூரில் இருக்கும் தனது பாட்டியின் சமாதிக்கு சென்று மறியாதை செய்கிறார். பிறகு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செய்துவிட்டு தெற்கு வீதியில் இருக்கும் ஏகேஎம் திருமணமண்டபத்தில் தனது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன் பி்ன்னர் அங்கு தனது ஆதரவாளர்களை தனிமையில் சந்தித்து பேசுகிறார். அங்கு தனக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் ஆதரவை பொறுத்தே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாமா என்கிற முடிவில் இறங்க இருக்கிறாராம்.

 

திமுக தலைவர் கலைஞரின் சொந்த தொகுதியனா திருவாரூர் அவர் மறைவையடுத்து இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட மு.க.அழகிரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவிக்கிடந்தன. கலைஞர் உயிரோடு இருக்கும்வரை திருவாரூருக்கு வராத அழகிரியின் திடிர்வருகையின் மூலம் அந்தபேச்சுக்கு முற்றுப்புள்ளிவைக்க இருக்கிறது.

 

கலைஞரின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியை கடந்த  2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு எத்தனையோ முறை அழகிரி முயன்றும் மீண்டும்அவரால் திமுகவில் இணையமுடியவில்லை.
   
கடந்தமாதம் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புகாரணமாக கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் வேகவேகமாக சென்னைக்கு வந்தார்.  கலைஞரின்  இறுதிநிகழ்ச்சிவரை ஸ்டாலினோடு இனைந்தே ஒவ்வொருநிகழ்விலும் இருந்தார்.பிறகு கலைஞர்இறந்தமூன்றாவதுநாளே திமுகதொண்டர்கள் அனைவரும் எனக்கு பின்னால்இருக்கிறார்கள் என ஒருபோடுபோட்டார். 


அதோடு நிற்காமல் செப்டம்பர் 5 ம்தேதி சென்னையில் தனது ஆதர்வாளர்களோடு ஊர்வலம் போவதாக அறிவித்து அதில் 1 லட்சம் பேர் கலந்துகொள்ளுவார்கள் என அறிவித்து, ஊர்வலத்திற்கு சொன்ன அளவில் கூட்டத்தை காட்டாமல் புசுவானமாகினார்.


பிறகு தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியே வருகிறார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க ஸ்டாலின்  உள்ளிட்ட தலைவர்கள் தயாராக இல்லை. இந்த சூழலில்  28 ஆம் தேதி   திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின்  தலைவரானார் ஸ்டாலின். அதனை தொடர்ந்து திருவாரூர் தொகுதிக்கும், கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்றுவிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுவிட்டே சென்றிருக்கிறார். 

 

இதற்கிடையில் அழகிரி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அதற்கு டி.டி.வி தினகரனிடம் ஆதரவு கேட்டதாகவும் திருப்பரங்குன்றம் தொகுதியில்  டிடிவி அணியினருக்கு அழகிரி ஆதரவு அளிப்பதாகவும்,   செய்திபரவிக்கிடக்கின்றன. இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் திருவாரூர் தொகுதியில் தனக்கு உள்ள செல்வாக்கு எப்படி என்பது  குறித்து அறிந்து கொள்ளவே அழகிரி  வருகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 

அவரது ஆதரவாளர் ஒருவரிடம் விசாரித்தோம், ‘’ எங்களுக்கு தனிப்பட்ட ஆதரவு என்பது குறைவுதான். நன்னிலம் பகுதியில் திமுக மா.செ பூண்டிகலைவாணன் மீது உள்ள அதிர்ப்தியால் சிலர் உள்ளனர்.  அவர்களைதான் சென்னையில் நடந்த ஊர்வலத்திற்கும் பஸ் பிடித்து அழைத்து சென்றோம், அவர்களை தான் அழகிரி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கும் அழைத்துவரவுள்ளோம், அழகிரியும் ஸ்டாலினும் ஒன்றாகவேண்டும் என்கிற கோரிக்கையைதான் அவரிடம் வைக்க இருக்கிறோம். ’’என்றனர். எது எப்படியோ திருவாரூரிலும் அழகிரியின் சாயம் வெளுக்க போகிறது என்கிறார்கள் திமுகவினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...