ADVERTISEMENT

விஜய் ரசிகர்கள் ஏற்படுத்திய குழப்பம்! விளக்கம் அளிக்கும் ’சம்பவம்’ டைரக்டர்!

06:55 PM Dec 03, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

அஜீத், விஜய் படங்களுக்கு டைட்டில் வைக்காமல் படப்பிடிப்பு நடத்தி வருவது வழக்கமாகிவிட்டது. ரசிகர்களிடையே ஒருவித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு கடைசியாக டைட்டிலை அறிவிக்கிறார்கள். படக்குழுவினர் டைட்டிலை அறிவிக்கும் வரை ரசிகர்கள் ஆளாளுக்கு ஒரு டைட்டிலை டிசைன் செய்து வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

அப்படித்தான், லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும், இன்னும் பெயரிடப்படாத ‘தளபதி -64’படத்திற்கு, ரசிகர்கள் தாங்களாகவே ஒரு டைட்டிலை டிசைன் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். தளபதி-64 படத்திற்கு ‘சம்பவம்’ என பெயரிட்டு வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்தனர் ஸ்ரீகாந்த்,தினேஷ் மாஸ்டர் நடித்து வரும் சம்பவம் படக்குழுவினர்.

மைனா படத்தை தயாரித்த நிறுவனம்தான் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் ஏற்படுத்தியுள்ள குழம்பத்திற்கு சம்பவம் படத்தின் இயக்குநர் ரஞ்சித்பாரிஜாதம் விளக்கம் அளிக்க வேண்டியதாகிவிட்டது.

தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்

இது குறித்து இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதத்திடம் பேசியபோது, ‘’மூன்று வருடங்களுக்கு முன்பே சம்பவம் என்ற டைட்டிலை நான் பதிவு செய்துவிட்டேன். தொடர்ந்து அதை புதுப்பித்தும் வருகிறேன். இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு ஷூட்டிங்கும் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் வலைத்தளங்களில் இப்படி பரப்பி வந்தார்கள். ஆரம்பத்தில் நாங்களும் அலட்சியமாக இருந்துவிட்டோம்.

தீவிரமாக வலைத்தளங்களில் பரவியபோதுதான் அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் எங்கள் படத்தின் டைட்டில் டிசைனை அப்படியே வைத்து வெளியிட்டதால் கடும் அதிருப்தி அடைந்தோம். அதனால்தான் தளபதி-64 படக்குழு வட்டாரத்தில் விசாரித்தபோது நாங்கள் அப்படியொரு டைட்டிலை வைக்கவில்லை என்று தெரிவித்தார்கள். அதே நேரத்தில் நெருப்பில்லாமல் புகையாது என்றும் சினிமாவட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். ரசிகர்களின் தொடர்ந்து இப்படி செய்தால், எங்களுக்கு அது பாதிப்பாக அமைந்துவிடும் என்றுதான் இப்போது விளக்கம் கொடுக்க வேண்டியாகிவிட்டது’’என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT