/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/82_36.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக முன்பு லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில், விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'சிஎஸ்கே' என தலைப்பு வைக்கப்பட்டதாகவும், கதாநாயகியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முன்பு தகவல் வெளியானது. அண்மையில் படப்பிடிப்பு செப்டம்பரில் நடக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.
இதையடுத்து விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. சமீபத்தில் நடிகை அபர்ணா தாஸ் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் ஜெய்க்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது படக்குழு. அங்கு விஎஃபக்ஸ் ஸ்கென் மூலம் விஜய்க்கு டெஸ்ட் லுக் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிம்ரனை இப்படத்தில் நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிகாவிடம் பேசிய அதே கதாபாத்திரதில் சிம்ரனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக 'ஒன்ஸ்மோர்', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பிரியமானவளே', 'உதயா' உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் ஜோடியாக நடித்துள்ளார் சிம்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)