Skip to main content

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 6 படகுகள் ராமேசுவரம் கொண்டு வந்த தனிக்குழுவினர்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 6 படகுகள் 
ராமேசுவரம் கொண்டு வந்த தனிக்குழுவினர்

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 179 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இதில் முதல் கட்டமாக 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிகாரிகள், மீனவர்கள் உள்பட 53 பேர் கொண்ட தனிக்குழுவினர் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்டு கொண்டுவர 7 படகுகளில் இலங்கைக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் விடுவிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டபின், முதல் கட்டமாக 6 படகுகளை தமிழகம் கொண்டுவர முடிவு செய்தனர். இதையடுத்து அந்த 6 படகுகளுடன் தனிக்குழுவினரை இலங்கை கடற்படையினர் அழைத்து வந்து சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.அங்கிருந்து தனிக்குழுவினர் நேற்று மாலை 6 மணிக்கு 6 படகுகளுடன் ராமேசுவரம் துறைமுகம் வந்தடைந்தனர்.

சார்ந்த செய்திகள்