Skip to main content

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு: 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு 

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

10, 11, 12th public exam date announced

 

தமிழகத்தில் இந்தாண்டு நடைபெறும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2வரை நடைபெறவுள்ளது. 

 

12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும். 

 

11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜுலை 7ஆம் தேதி வெளியிடப்படும்.  

 

10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படும்.   

 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் விவரங்கள் தற்காலிகமானதுதான் என்றும் அதற்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படவும் வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்