ADVERTISEMENT

பாஜகவிற்கு இத்தனை தொகுதிகள்தானா? - இறுதிக்கட்டத்தை நோக்கி அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு! 

10:12 AM Feb 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி எனப் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில், நேற்று (26/2/2021) சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரை பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் இன்று சந்தித்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி உள்ளிட்டோர் அவரது இல்லத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு துணை முதல்வர் ஓபிஎஸ்ஸையும் அந்த குழு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கான பட்டியலை பாஜகவினர் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் கொடுத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்தத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாஜகவிற்கு 22-லிருந்து 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மார்ச் 12 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்க இருப்பதால் விரைவில் தொகுதிகள் இறுதிசெய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT