தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து. அதில் பா.ம.க.,தேமுதிக, தமாகா மற்றும் சில கட்சிகளை அணி சேர்த்து தேர்தலை அதிமுக சந்தித்தது. இந்த தேர்தல் அதிமுகவிற்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியதோடு தங்களது அணியில் இருந்த பாஜகவுக்கும் மிகப்பெரிய இழப்பை கொடுத்துள்ளது. ஏற்கனவே சென்ற தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார். தற்போது பாஜக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் தமிழகத்தில் இருந்து ஒரு எம்பியும் இல்லாமல் போனது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Advertisment

bjp

இந்த நிலையில் தான் ஏற்கனவே இருந்த மத்திய அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் அல்லது தமிழிசை அல்லது ஹெச்.ராஜாஎன பாஜக தமிழகத் தலைவர்கள் ஒருவரை மாநிலங்களவை எம்பி ஆக கொண்டு வந்து மத்திய அமைச்சர் பதவியை பாஜக வழங்க உள்ளது. அதற்காக கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஒரு மாநிலங்களவை எம்.பி. யை உங்கள் கட்சி சார்பில் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

bjp

Advertisment

இதுபற்றி அதிமுக அமைச்சர் தங்கமணி தனது சக அமைச்சரான வேலுமணியிடம் கூறியிருக்கிறார். நம்மிடம் ஒரு ராஜ்சபா எம்.பி. இருக்கிறது அவர்கள் நிர்வாகியை மத்திய அமைச்சர் ஆக்குவதற்காக வேறு வழி இல்லை நாம் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று கூறினாராம்.