ADVERTISEMENT

ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்ஷன்... அதிருப்தியில் திமுகவினர்... எடப்பாடிக்கு செக் வைக்கும் திமுகவின் அதிரடி மாற்றம்! 

02:45 PM Feb 10, 2020 | Anonymous (not verified)

திருப்பத்தூரை உள்ளடக்கிய தி.மு.க.வின் வேலூர் மேற்கு மா.செ.வாக இருந்த முத்தமிழ்ச் செல்வியைத் தூக்கி விட்டு, பழைய மா.செ.வான தேவராஜுக்கு தி.மு.க. தலைமை பொறுப்பு கொடுத்துள்ளது. இந்த தேவராஜ் 2016 தேர்தலில் வாணியம்பாடியில் தனக்கு சீட் தராததால் கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வேலை செய்யாமல் ஒதுங்கிட்டார் என்றும், அது போல் ஜோலார்பேட்டையில் அமைச்சர் வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டதால், தி.மு.க. வேட்பாளர் கவிதா குறைந்த வாக்குகளில் தோல்வி பெற்றதாக கலைஞர் வரை புகார் சென்று மா.செ. பதவி பறிக்கப்பட்டது. அவருக்குப் பதில் அதே சமூகத்தில் முத்தமிழ்ச் செல்வி நியமிக்கப்பட்டார். அவரோட நிர்வாகத் திறன் பற்றி சர்ச்சைகள் இருந்தாலும், அவரைத் தூக்கி விட்டு அந்த இடத்தில் கட்சிக்கு எதிராக வேலை பார்த்த தேவராஜை மீண்டும் நியமித்திருப்பது வேலூர் தி.மு.க.வில் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


மேலும், தி.மு.க.வின் தேர்தல் பணிக்குழுச் செயலாளராக இருந்த மாஜி செல்வகணபதியை, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஸ்டாலின் நியமித்து இருந்தார். இது எடப்பாடிக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் பகுதி என்று சொல்லப்படுகிறது. அதனால் எடப்பாடியின் செல்வாக்கை குறைப்பதற்கு முன்னாள் அதிமுக நிர்வாகியான செல்வகணபதியை திமுக தலைமை நியமித்து இருப்பதாக சொல்கின்றனர். திமுகவில் நடக்கும் அதிரடி மாற்றங்களால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT