ADVERTISEMENT

நெல்லை முன்னாள் மேயர் வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலினை சிக்க வைக்க திட்டமா?

03:03 PM Aug 01, 2019 | Anonymous (not verified)

நெல்லை தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி படுகொலை விவகாரத்தில் தி.மு.க. மேலிடத்தைக் குறிவைத்து போலீஸ் விசாரணை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியும் அவர் கணவர் முருகசங்கரனும் பணிப்பெண் மாரியம்மாளும் போன 23-ந் தேதி அவர்கள் வீட்டிலேயே வைத்துக் கொடூரமாகக் கொல்லப் பட்டிருந்தாங்க. இதுதொடர்பாக நமது நக்கீரன் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் பெண் பிரமுகர் ஒருவருக்கு இதில் தொடர்பு இருக்குன்னு குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கும் தன் குடும்பத்துக்கும் இந்தக் கொலைகளோடு தொடர்பில்லைன்னு தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாள் மறுத்துவந்த நிலையில், அவர் மகன் கார்த்திகேயனை கைது செய்திருக்கு போலீஸ்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


தேர்தலில் சீனியம்மாளுக்கு சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி 50 லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்ட உமாமகேஸ்வரி, சீட்டை வாங்கித் தராததோடு பணத்தையும் அவருக்குத் திருப்பித்தரவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்தக் கோபத்தில் கொலை நடந்திருக்கும்னு விசாரணையை அந்த கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் சீட் வாங்கித் தருவதாக கைமாறிய பணம், தி.மு.க. தலைமையிடம் கொடுக்கப்பட்டதான்னு விசாரணையை நகர்த்த போலீசுக்கு மேலிடம் உத்தரவிட்டிருக்காம். அதாவது, தி.மு.க. தலைமையின் நிலைப்பாட்டால்தான் உமாமகேஸ்வரிக்கும் சீனியம்மாளுக்கும் பகைன்னும், அதனால் கொலை வரை போயிருக்காங்கன்னும் விசாரணையைக் கொண்டுபோய், தி.மு.க. தலைவர்ங்கிற முறையில், ஸ்டாலினைக் குறிவச்சி விசாரணையைக் கொண்டுபோய் அவரோட இமேஜை காலி பண்ண எடப்பாடி அரசு திட்டம் போட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT