தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நடத்தப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு சபாநாயர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. எம்.எல்.ஏ.க்களுடன் அதிகாரிகள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கும் ஏற்கனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளுது. அனைவரும் தவறாமல் தங்களின் மருத்துவ சான்றிதழை சட்டப்பேரவை வரும்போது கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்நாள் இறந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.