Minister who went home and inquired about his health; Happy District Secretary

உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த மாவட்டச் செயலாளரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Advertisment

5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திட்டப் பணிகள் துவக்கி வைப்பது என அரசு சார்பாக நடந்த நிகழ்ச்சிகளும் மற்றும்திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்த நாளும்கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 70 இணையர்களுக்கு இலவசமாக திருமணம் மற்றும் திமுக சார்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும்விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

Advertisment

இதற்கிடையே திமுகவின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்கிற்கு உடல்நலம் சரியில்லாத நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுஅவருக்கானசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் உடல்நலம் தேறி வந்த அவர் அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இன்று மதியம் (05/03/2023) கார்த்திக்கின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலம்விசாரித்தார். மேலும் அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் பூரணமாக உடல் நலம் பெறும் வரையில் ஓய்வில் இருங்கள் எனவும் ஆலோசனைகளை கூறினார்.அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் சென்று கார்த்திக்கை நலம் விசாரித்தார். அமைச்சர்கள் நலம் விசாரிக்கும் பொழுது கார்த்திக்கின் மனைவி லட்சுமி இளஞ்செல்வி உடன் இருந்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த உதயநிதி, உடல்நலம் குன்றிய மாவட்டச் செயலாளரை அவர் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து ஆலோசனைகள் வழங்கி ஆறுதல்சொன்னது திமுக உடன் பிறப்புகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment