ADVERTISEMENT

“இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்பது சாத்தியமில்லை” - பரூக் அப்துல்லா

12:10 PM Jan 05, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா கொடைக்கானல் வந்திருந்தார். அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “தற்போது நான் 43 ஆண்டுகளுக்குப் பிறகு கொடைக்கானல் வந்துள்ளேன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சட்டத்தை மத்திய அரசு நீக்கிய பிறகும் அங்குப் பயங்கரவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது.

இந்தியா என்பது பன்முகத் தன்மை, பழமொழி பேசும் மக்கள், பல்வேறு மதங்களைக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதால் இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்பது சாத்தியமில்லை. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை விவாதம் செய்யக்கூட அனுமதிப்பதில்லை. ஒன்றுபட்ட இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம்.

தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் அனைத்துத் துறைகளும் சிறப்பாக உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வராகச் செயல்படுகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT