supreme court

ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 370ஐ, மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்தது. அதற்குஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவர் ஃபாரூக் அப்துல்லா மீது, தேசத் துரோக சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில்,ஃபாரூக் அப்துல்லா அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370ஐ, சீனா அல்லது பாகிஸ்தான் உதவியோடு திரும்பப் பெறுவோம் என பேசியதாகவும், எனவே அவர் மீது தேசத் துரோக சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "மத்திய அரசால் எடுக்கப்பட்ட முடிவிலிருந்துவேறுபடும் ஒரு பார்வையின் வெளிப்பாட்டை தேசத் துரோகம் என்று கூற முடியாது” எனக் கூறி, ஃபாரூக் அப்துல்லாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இது விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு எனக் கூறி, மனு தாக்கல் செய்யதவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

Advertisment

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ, சீனா அல்லது பாகிஸ்தான் உதவியோடு திரும்பப் பெறுவோம் என ஃபாரூக் அப்துல்லா கூறவில்லை என அவரது தரப்பு ஏற்கனவே விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.