farooq abdullah

Advertisment

அயோத்தியாவில் ராமர் கோவில் கட்ட வேண்டும், அதற்காக மசோதா உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று பல இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற கருத்துகளுக்கு விமர்சணங்களும், கடுமையான எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, “வருகின்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராமர் வெற்றிபெற வைத்துவிடுவார் என்று பாஜக நினைக்கிறது. கடவுளா வாக்கு செலுத்த போகிறார், மக்கள்தான் வாக்கு செலுத்த போகிறார்கள். ராமரும் வாக்களிக்கப் போவதில்லை, அல்லாவும் வாக்களிக்க போவதில்லை” என்றார்.