Theater opens after 23 years in srinagar ; Ponni's Selvan was the first film

Advertisment

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 23 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கு திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீரரின் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கமான இதனை ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று திறந்து வைத்தார். இந்த திரையரங்கில் முதல் படமாக பொன்னியின் செல்வன் மற்றும் இந்தி படம் விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையிடப்படவுள்ள இந்த திரையரங்கில் வருகிற 26ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 3 திரைகள் மற்றும் மொத்தம் 522 இருக்கைகளும் உள்ளன. இதே போல் கடந்த 18ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் புல்வாமா, ஸூபியான் ஆகிய மாவட்டங்களில் திரையரங்குகளை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 1980 வரை சுமார் 12 திரையரங்குகள் செயல்பட்டு வந்தன. பின்பு பயங்கரவாத கும்பல் திரையரங்க உரிமையாளர்களை அச்சுறுத்தியதால் அவை மூடப்பட்டன. பிறகு 1990களில் மீண்டும் திரையரங்குகளை திறக்க முயன்றனர். அப்போதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அதனை முறியடித்தனர். இதனால் நீண்ட வருடம் திரையரங்குகள் இல்லாமல் இருந்த இடத்தில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டது அப்பகுதி இளைஞர்களிடம் வரவேற்பபை பெற்றுள்ளது.

Advertisment

இதனிடையே மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.