Skip to main content

பிப்.14 பசு அரவணைப்பு தினம்; நழுவிய இணை அமைச்சர் முருகன்

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

Feb. 14 Cow Hug Day; Minister of State Murugan who slipped

 

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தனர். வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்காக இந்தியா வழங்கிய மானியத்தின் கீழ் கட்டப்பட்ட திட்டங்களைப் பார்வையிடவும், யாழ்ப்பாணம் கலாச்சார மையமானது இந்தியா இலங்கைக்கு இடையேயான நல்லுறவுக்கான எடுத்துக்காட்டு என்பதை பிரதிபலிக்கும் நோக்கிலும் இந்தப் பயணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சர் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை திரும்பினர். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் கலாச்சார மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த யாழ்ப்பாண கலாச்சார மையம் முழுமையான இந்திய அரசாங்கத்தின் நிதியில் கட்டப்பட்டு யாழ்ப்பாண பகுதியில் உள்ள மக்களுக்கும் அவர்களது பயன்பாட்டுக்கும் இந்த கலாச்சார மையம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை சிறையில் ஒரு மீனவர்கள் கூட இல்லை. மீனவர்களின் படகுகளை விடுப்பது சம்பந்தமாக நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நானும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்தித்து பேசியுள்ளோம். இரு நாடுகளின் அமைச்சர்கள் அளவில் இந்த கூட்டம் நடைபெற வேண்டியது. அந்த கூட்டம் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இவை அனைத்திற்கும் கூடிய விரைவில் தீர்வு காணப்படும். பசுக்கள் அரவணைப்பு என்பது விலங்குகள் நலவாரியம் என்கிற தன்னிச்சையான அமைப்பு கொடுத்த அறிவிப்பு... நன்றி” என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

"பாடாய்ப்படுத்திவிட்டனர்" - லியோ பட ரிலீஸ் குறித்து எல். முருகன்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

l murugan about vijay leo release

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது. 

 

முதல் நாளான இன்று வழக்கம் போல் திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 4 மணிக்கே சிறப்புக் காட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தமிழக அரசு உத்தரவின்படி 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திரையரங்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

ஒவ்வொரு பகுதிகளிலும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் படத்தை வரவேற்று வரும் நிலையில், புதுக்கோட்டையில் ஒரு தம்பதி திரையரங்கினுள் நிச்சயம் செய்துகொண்ட சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் 20 அடி நீள கேக், பிரியாணி விருந்து என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ், அனிருத், மன்சூர் அலிகான், கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, வைபவ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ரசிகர்களுடன் திரையரங்கிற்கு வந்து படத்தை பார்த்து ரசித்தனர். இதனிடையே கேரளாவில் பெண்களுக்கென தனி பிரத்யேக காட்சியும் திரையிடப்பட்டது. 

 

இந்த நிலையில், இந்த படம் வெளியானது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், "கடந்த 1 வாரமாக லியோ லியோ லியோ-னு திமுகவினர் படக்குழுவை பாடாய்ப்படுத்திவிட்டனர். கடைசியாக அத்தனை தடைகளையும் மீறி படம் வெளியாகியிருக்கிறது. படத் தயாரிப்பாளருக்கும் படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்றார். 

 

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 மணிக்கு சிறப்புக் காட்சி கேட்டு தமிழக அரசிடம் படக்குழு கோரிக்கை வாய்த்த நிலையில் அது மறுக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது. 

 


 

Next Story

"எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிதான் 95% முடிந்ததாக ஜெ.பி.நட்டா கூறினார்"- மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

"JP Nadda said that the initial phase of AIIMS work is 95% complete" - Union Minister L. Murugan explanation!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்பகட்ட பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி நட்டா கூறியதாக அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். 

 

தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மதுரையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "மதுரைக்கு வந்த ஜெ.பி. நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூபாய் 1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூபாய் 134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

 

இதற்கு தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. இதனையடுத்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ள இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர். 

 

இந்த நிலையில், இன்று (24/09/2022) திருச்சியில் உள்ள சமயபுரம் கோயிலுக்கு சென்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார் .பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எல்.முருகன், "மதுரை எய்ம்ஸின் ஆரம்பக் கட்ட பணிகள் தான் 95% முடிந்ததாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறினார். ஜெ.பி.நட்டா கூரியத்தைப் புரிந்து கொள்ளாமல் தமிழக அரசியல்வாதிகள் விமர்சிக்கின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை 2026- ஆம் ஆண்டுதான் முடிக்க வேண்டும். ஜைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.