ADVERTISEMENT

திருச்சியில் 14 ஒன்றிய சேர்மன் பதவிகளை கைப்பற்றும் தி.மு.க.

01:03 PM Jan 08, 2020 | rajavel

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 14. இதில் ஒன்றிய வார்டு கவுன்சிலர்களின் எண்ணிக்கை 241. தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும்.

ADVERTISEMENT



திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. மணிகண்டம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 14 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 இடங்களும், சுயேச்சைகளுக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.

திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 9 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்களும், சுயேச்சைகளுக்கு 3 இடங்களும், மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள 17 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 12 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 3 இடங்களும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 8 வார்டுகளும் கிடைத்துள்ளன.


வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்களும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 23 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 15 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 5 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 3 வார்டுகளும் கிடைத்துள்ளன.

முசிறி ஒன்றியத்தில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 12 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 5 வார்டுகளும், சுயேச்சைக்கு ஒரு வார்டும், தொட்டியம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், தாத்தையங்கார் பேட்டை ஒன்றியத்தில் உள்ள 14 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 வார்டுகளும், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 8 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 வார்டுகளும், சுயேச்சை களுக்கு 5 வார்டுகளும் கிடைத்து உள்ளன.


இந்த 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் 11-ந்தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் தலைவர், துணை தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றுகிறது.

லால்குடி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர். சுயேச்சைகள் ஆதரவுடன் அ.தி.மு.க. தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி வருகிறது. ஆனால் இந்த லால்குடி திமுக மா.செ. கே.என்.நேருவின் சொந்தவூர் என்பதால் அதிமுகவின் முயற்சியை கே.என். நேரு சுயேச்சைகளின் ஆதரவை பெற்றுவிட்டார் என்கிறார்கள்.

துறையூர் ஒன்றியத்திலும் நடந்து உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 9 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும், 2 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இங்கும் சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவர், துணை தலைவர் பதவிகளை பிடிப்பதற்கான முயற்சியில் தி.மு.க. தீவிரமாக இறங்கி உள்ளது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் 12 ஒன்றியங்களை தி.மு.க. எளிதாக கைப்பற்றி உள்ளது. 2 ஒன்றியங்களில் சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவர் பதவியை பிடிப்பதற்கான முயற்சிகளை செய்து முடித்து விட்டது. இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு ஒரு ஒன்றியம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த கால கட்டங்களில் கூட அ.தி.மு.க. மணிகண்டம் உள்ளிட்ட சில ஒன்றியங்களில் வெற்றி வாகை சூடி இருக்கிறது. ஆனால் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் ஒரு ஒன்றியத்தை கூட பிடிக்க முடியாத அளவுக்கு சரிவு ஏற்பட்டு இருப்பது அ.தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT