தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு, பின்னர் வாக்குஎண்ணிக்கை நிறைவடைந்து, வெற்றி பெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் ஒன்றியத்தில் உள்ள 19 கவுன்சிலர் பதவிகளில், திமுக 13 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

 localbodyelection-dmk-admk

Advertisment

இந்நிலையில் பெரும்பான்மை உள்ள திமுக சார்பில் ஒன்றிய தலைவர் பதவிக்கு கிலப்பாடி ஒன்றிய கவுன்சிலர் ராஜா, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நியமித்தார். இதே போல் அதிமுக சார்பாக ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் இன்று நடைபெற்று வரும் மறைமுகத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் வரவில்லை என்று தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக பெரும் எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுக தரப்பு தேர்தலை நிறுத்த வேண்டும் என்று கூறி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிழவியது.

Advertisment

dmk

இதையடுத்து திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமானஐ.பி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தேர்தல் நடத்தப்பட்டடு, அதில் திமுக சார்பாக ஒன்றிய கவுன்சிலர் ராஜா ஒன்றிய தலைவராக வெற்றிபெற்றார். இதேபோல்திண்டுக்கல் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் பாஸ்கரன் தேர்வுசெய்யப்பட்டார்.