Skip to main content

டெல்லி பல்கலை. மாணவர் தேர்தல்: காங்கிரஸ் ஆதரவு மாணவர்கள் வெற்றி

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
டெல்லி பல்கலை. மாணவர் தேர்தல்:
காங்கிரஸ் ஆதரவு மாணவர்கள் வெற்றி



டெல்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கான தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், 4 முக்கியப் பதவிகளில் தலைவர், துணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளை காங்கிரஸ் சார்பு அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யூஐ) கைப்பற்றியுள்ளது.

பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) இணைச் செயலாளர், பொதுச் செயலாளர் ஆகிய இரு பதவிகளை பிடித்துள்ளது. மாணவர் சங்க தலைவராக ராக்கி துஷீத், துணைத் தலைவராக குனால் ஷெராவத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2012-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் மாணவர் அமைப்புத் தலைவர் பதவியைப் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

சார்ந்த செய்திகள்