Indian national flag to wipe the vehicle..

டெல்லியில் தனது இருசக்கர வாகனத்தை இந்திய தேசியக் கொடியால் ஒருவர் துடைத்து சுத்தம் செய்யும் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனையொட்டி பெருமளவு மக்கள் தேசியக்கொடிகளை வாங்கி தங்கள் வீடுகளில் ஏற்றி வைத்தனர். மொத்தம் 30 கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்று தீர்ந்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.

Advertisment

ஆனால் தற்போது டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் தனது இருசக்கர வாகனத்தை மடித்து வைக்கப்பட்ட தேசியக்கொடியை வைத்து துடைத்து சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தான் வேண்டும் என்றே அவ்வாறு செய்யவில்லை எனவும் தவறுதலாக நடந்துவிட்டது எனவும் கூறினார்.