The police who incident happened his own son

குஜராத் மாநிலம், நவ்சாரி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் பரியா. இவர் அங்கு போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வன்ஷ் (10) என்ற மகன் இருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி சஞ்சய் பிரியா பணிக்கு செல்லும்போது தனது மகனை உடன் அழைத்துச் சென்றுள்ளார். காலை வெளியே சென்ற அவர்கள் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் பதற்றமடைந்த சஞ்சய்யின் மனைவி, சஞ்சய்யை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, 2 நாட்களுக்கு பின்னர் நேற்று, சஞ்சய் தன் மனைவியை தொடர்பு கொண்டு மகனை கொலை செய்துவிட்டதாகவும், பணியிடமான போக்குவரத்து நிழற்குடையில் உடல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார், சஞ்சய் பணிபுரிந்து வந்த போக்குவரத்து நிழற்குடைக்கு சென்று பார்த்துள்ளனர்.

Advertisment

அப்போது, அங்கு வாயில் நுரை தள்ளியநிலையில் கழுத்து நெறிக்கப்பட்டு வன்ஷ் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, போலீசார் உடனடியாக சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஞ்சய் பரியாவை தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சஞ்சய் தனது மகனை விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. ஏன் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.மகனையே தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.