Skip to main content

கவர்ச்சி உடையில் தீபிகா படுகோன்; கொந்தளிக்கும் வலதுசாரிகள்!

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

pathan movie Besharam song controversy

 

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் 2023 ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ள 'பதான்' பான் இந்தியா திரைப்படத்தில் 'பேஷாராம் ரங்' என்ற முதல் பாடல் காட்சி இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது. அப்பாடல் காட்சியில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக நடித்திருப்பது இளைஞர்கள் மத்தியில் வைரலாக இன்னொருபுறம் பாடல் காட்சியில் இடம்பெற்ற அவரது உடை ஒன்றின் காவி நிறம் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

 

இதில், காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்து தீபிகா படுகோன் நடித்திருப்பதுதான் சமூக வலைத்தளங்களில் இந்துத்வா ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. இதில், அப்படத்தை மட்டும் எதிர்க்காமல், பாலிவுட் திரையுலகமே மிகவும் மோசம் என்பதாக, பதான் படத்தை மட்டுமல்லாமல், பாலிவுட் திரையுலகையே புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன், #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கிவருகிறார்கள். 

 

பாஜக, ராஷ்ட்ரிய சேவிகா சமிதி மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பினை பதிவுசெய்துவருகிறார்கள். 'காவி நிறம், துறவு, தியாகம், அறிவு, தூய்மை மற்றும் சேவை ஆகியவற்றின் சின்னமாகும். கராச்சி பாலிவுட் கூட்டம், காவி நிறத்தை கவர்ச்சியான நிறமாகக் காட்டி அவமதித்துள்ளார்கள்' என்றொருவர் ட்வீட் செய்துள்ளார். 'தீபிகா அணிந்துள்ள உடையின் நிறம், இந்து மதத்தின் தெய்வீக நிறத்தைக் கேலி செய்கிறது' என்று சிலர் ட்வீட் செய்துள்ளனர். 

 

pathan movie Besharam song controversy

 

இந்துக்களை அவமதிக்கும் இத்திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரும், வி.எச்.பி. தலைவருமான டாக்டர் பிராச்சி சாத்வி ட்வீட் செய்துள்ளார். 'பாலிவுட்திரையுலகம், திரைப்படங்களை எதிர்மறையாகக்காட்டி விளம்பரப்படுத்துவதற்காக, கொச்சையான செயல்களைச் செய்கிறது. அந்த  திரைப்படங்களைப் புறக்கணியுங்கள்' என்றொருவர் ட்வீட் செய்துள்ளார்.

 

pathan movie Besharam song controversy

 

'பேஷாராம் ரங் பாடலில் தீபிகாபடுகோன் காவி உடை அணிந்து, மலிவான அநாகரிக செயல்களில் ஈடுபடுகிறார். பாலிவுட் வேண்டுமென்றே இந்து மதத்தின் தெய்வீக நிறத்தை கேலி செய்கிறது. ஷாருக்கான் மட்டும் பச்சை நிற ஆடைகளை அணிந்துள்ளார். இது லவ் ஜிகாத்தின் மறைமுகச் செயல்போல இருக்கிறது' என்று ஒருவர் கொளுத்திப் போட்டுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக, வழக்கத்தைவிட 50 சதவீதம் கூடுதல் சம்பளமாக, 15 கோடி ரூபாய்வரை தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல நூறு கோடிகளைச் செலவழித்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு எழுந்துள்ள பிரச்சனையால் தயாரிப்பு நிறுவனம் முழி பிதுங்கியுள்ளது. 

 

- தெ.சு.கவுதமன் 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.