கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.
இதற்கான வேட்புமனு தாக்கலுக்காக இன்று அவர் மாண்டியாவிலுள்ள தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார். அவரின் வேட்புமனு தாக்கல் ஊர்வலத்திற்காக அந்த தொகுதியை சேராத வேறு தொகுதிகளில் உள்ள தொடர்கள் லாரிகள் மூலமாக அழைத்து வரப்பட்டனர். காலை 11.30 மணிக்கே அழைத்துவரப்பட்ட அவர்கள் அங்கு காத்திருந்த நிலையில் மதியத்திற்கு மேல்தான் நிகில் வேட்புமனு தாக்கல் செய்ய அங்கு வந்துள்ளார். அதற்குள் தொண்டர்கள் அனைவரும் சோர்வடைந்து அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது அந்த பகுதியே கலையிழந்து காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தனது முதல் தேர்தலை எதிர்கொள்ளும் நிகிலுக்கு ஆதரவாக வெளி மாவட்ட தொண்டர்களும் அங்கு அழைத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.