Skip to main content

மராட்டியத்தில் 4 லட்சத்தை கடந்த கரோனா... ஒரே நாளில் 298 பேர் உயிரிழப்பு!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
df

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று முன்தினம் 7,717 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 9,211 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,651 ஆக அதிகரித்துள்ளது. 1,46,129 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும் 298 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 14,463 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 7,478 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 2,39,755 ஆக உயர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்