Radhika Sarathkumar has filed a police complaint against Shivaji Krishnamurthy

திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது விருதுநகர் பாஜக கூட்டணி வேட்பாளர் ராதிகா சரத்குமார் புகார் அளித்துள்ளார்.

இதற்கு முன்பே பலமுறை சர்ச்சை பேச்சுக்களில் சிக்கி கைது செய்யப்பட்டவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. அண்மையில் நடிகை குஷ்பு குறித்து பேசியது கண்டனத்தை பெற்ற நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு பின்னர் மன்னிப்பு கேட்டதால் மீண்டும் திமுகவில் உறுப்பினராக சேர்ந்திருந்தார். இந்நிலையில் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் ராதிகா சரத்குமார் குறித்துசிவாஜி கிருஷ்ணமூர்த்திபேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பை தெரிவித்திருந்த ராதிகா சரத்குமார், 'ஏன்டா படுபாவி ஜெயிலுக்குப் போய் நீ திருந்த மாட்டியா. உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வச்சிருக்காங்களே அவங்க தான் குத்தம் சொல்லணும்.இதுல உனக்கு அந்த சாம்ராஜ்யசக்கரவர்த்தியோட பேரு வேற. உன்னை மாதிரி ஆட்கள்எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்' என காட்டமாகத்தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்பொழுதுசிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிராதிகா சரத்குமார் தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.