ADVERTISEMENT

இந்தியாவில் மூன்று லட்சத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

09:49 AM Jan 25, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு தற்போது குறையத்தொடங்கியுள்ளது. நேற்று 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 614 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 753 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT