CORONA

Advertisment

இந்தியாவில் தினசரி கரோனா அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இது நேற்றை விட 56.6 % சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 325 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் 19,206 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,630 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 797 பேருக்கும், டெல்லி 465 பேருக்கும், கேரளாவில் 234 பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 2,630 பேரில், 995 பேர் குணமடைந்துள்ளனர்.