corona

Advertisment

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்ததினசரி கரோனா பாதிப்பு, கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்தநிலையில்தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம்2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியான நிலையில், இன்று காலை வரையிலான 24 மணிநேரத்தில்2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது கடந்த 24 மணிநேரத்தில் நேற்றைவிட 44 ஆயிரத்து 889 பேருக்கு அதிகமாக கரோனாஉறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 441 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 157 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,961 ஆக உயர்ந்துள்ளது.