Skip to main content

உடற்கூறாய்வு செய்து அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

 Excitement as the person who was autopsied and buried came alive!

 

இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர் மூன்று மாதங்கள் கழித்து உயிருடன் வந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம் மதிகிரி தாலுகாவிற்கு உட்பட்ட சிறிய கிராமம் சிக்கமாலூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜப்பா (வயது 59). கூலி வேலை செய்து வந்த நாகராஜப்பா மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகராஜப்பாவை காணவில்லை என உறவினர்களும் குடும்பத்தாரும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். தேடுதலுக்குப் பின்னர் நாகராஜப்பா ஒரு புதர் பகுதியில் இறந்து கிடப்பதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அவருடைய மகள் நேத்ரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பிறகு உடற்கூறாய்விற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சொந்த ஊரிலேயே நாகராஜப்பாவின் உடல் உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கான இறப்பு சான்றிதழும் பெறப்பட்டது.

 

 Excitement as the person who was autopsied and buried came alive!

 

இந்நிலையில் நாகராஜப்பா இறந்து மூன்று மாதங்கள் கழித்து நேற்று திடீரென சொந்த ஊருக்குத் திரும்பினார். முதலில் அவரை பார்த்த அனைவரும் பேய் என நினைத்து அச்சத்தில் ஓடினர். நாகராஜப்பா சொந்த வீட்டுக்குச் சென்றபோது அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தார். இதுகுறித்து கிராம மக்கள் அவரிடம் விசாரிக்கையில் இதுதொடர்பான தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து என்னதான் நடந்தது என அறிந்துகொள்ள  உள்ளூரைச் சேர்ந்த செய்தியாளர்கள் இதுதொடர்பாக அவரிடம் பேட்டி எடுத்தனர். அப்பொழுது மதுபோதையில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்ததாக நாகராஜப்பா கூறினார். அப்பொழுது நாகராஜப்பா என்று உடற்கூறாய்வு செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டவர் யார் என்ற குழப்பத்தில் உள்ளனர் அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.