Skip to main content

'நெஞ்சை கேளு' - வெளியானது 'பிசாசு 2' பாடல்

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

pisasu2 Nenjai Kelu song out now

 

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.  

 

பிசாசு 2 படத்தில் முதலில் கதையின் தேவைக்காக ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி வைக்கப்பட்டது என்றும்,  பிறகு குழந்தைகள் இந்த படத்தைப் பார்ப்பார்கள் என்பதால் நிர்வாண காட்சிகளைப் படத்திலிருந்து இயக்குநர் மிஷ்கின் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான 'நெஞ்சை கேளு' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான ல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நெஞ்சை கேளு பாடலும் பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது. இந்த பாடலை கபிலன் எழுதப் பிரியங்கா பாடியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்